பாலையில் நீரூற்று நீ எனக்கு.
என் இதழ் பட்டு நீர் நஞ்சானால்
நான் மரித்துப் போவேன்.
இந்த இரவில் ஏன்
மண்மீது உதிர்கிறாய் மரமல்லியே?
உலராத கண்ணீர்துளிகளென
உனைக்கண்டு திக்கென்கிறது என் மனம்.
உன்னைத் தொட்டெடுக்கையில் நடுங்குகின்றன என் விரல்கள்.
உன்னில் எஞ்சியிருக்கும் வாசம்
என்னிடம் சொல்வதுதான் என்ன?
மண்மீது வாழ்ந்து வீழ்ந்து
மரித்துப் போதல் சுகந்தமென்றா?