இதுவோ யாமச்சிறுபொழுது.
வேணு வேட்ராயன்
திங்கள், 24 பிப்ரவரி, 2025
பாரிஜாத சிறுமலர்கள் பூத்து விழித்திருக்கின்றன.
யாவரும் துஞ்சும் இந்நள்ளிருளில்
அச்சிறுவெண்மலர்களிலிருந்து
நீ இறங்கி வருகிறாய்.
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025
வியாழன், 13 பிப்ரவரி, 2025
நீரெனில் நீர்.
நிலமெனில் நிலம்.
தீயெனில் தீ.
வானெனில் வான்.
வளியெனில் வளி.
சொல் எனில் சொல்.
இல் எனில் இல்.
A poem is a magical frame.
It will perfectly fit on images of all shapes and sizes of your own making.
திங்கள், 10 பிப்ரவரி, 2025
ஒரு குழந்தையை
கையளித்துச் செல்வது போல
அவள்
உன்னை என்னிடம் விட்டுச்செல்கிறாள்.
இக்கணத்தில்
நீ எனக்கு தேவதை.
அவள் என் தெய்வம்.
நானோ ஓர் எளிய மானுடன்.
உன்னைக் கையில் ஏந்தி நிற்கையில்
என் கண்களில் பூத்து
உன் தாள்மீது உதிர்கின்றன
தூய கண்ணீர்த்துளிகள்.
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025
உண்மையில்
எல்லாம்
நிலைத்திருக்கிறதா
என்ன?
எல்லாம்
மாறிக்கொண்டிருக்கிறதா
என்ன?
அதை
அக்கணம்
அவ்விதம்
நீ அறிகிறாய்.
அவ்வளவுதானே?