திங்கள், 27 அக்டோபர், 2025

 நேற்று இரவெல்லாம்

என் தோள் மீது 

சாய்ந்திருத்தாய்.

நீ இல்லாத இந்நள்ளிரவில்

உனக்கென சற்றே இசைந்து அசைகிறது

உனையேந்திய என்தோள்.


அசையும் அக்கணத்தில் 

விழித்துக் கொள்கிறேன்.

விழித்தவுடன் மறைந்துபோனதேன்? மாயக்காரி!