புதன், 7 மே, 2025

நான் யாசிக்கிறேன்.
இடுபவர் நிலையறிந்தா
யாசிக்கிறேன்?
நான் வேட்டையாடுகிறேன்.
இரையின் நிலையறிந்தா
வேட்டையாடுகிறேன்?

உன்னிடம்
யாசிக்கும் நான் யார்?
உனையே
வேட்டையாடும் நான் யார்?

யாசித்து ஏந்தும் என் கைகளுக்கும்
அதில் பிச்சையிடும் 
உன் ப்ரிய விரல்களுக்கும் இடையே அவ்வளவு தூரம்.

உனைப்பற்றி உயிர்க்குடிக்கும்
என் கோரைப்பற்களோ 
உனக்கு மிக நெருக்கம்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு