சில வெண்டை காய்கள்
சில தக்காளிப் பழங்கள்
ஒரு வெங்காயம்
இவை யாவையும்
நன்றாகக் கழுவி
சீராக நறுக்கி
சிறிதளவு எண்ணையில் இட்டு வதக்கி
கொத்தமல்லி இலைகள் தூவி அதை
கோதுமை ரொட்டியுடன் சேர்த்து
நான் சுவைக்கையில்
என் நாவின் மொட்டுக்களில்
சுவையென மலர்கிறாய் நீ.
தக்காளி வெங்காயம் வெண்டைக்காய்
கொத்தமல்லி
கருவேப்பிலை இலைகளே நன்றி!
உங்களை விதைத்து நீரூற்றி
அறுவடை செய்து எனக்கு சேர்த்த
கரங்களே நன்றி!
நிலம் நீர் காற்றே
நீல வானே நெருப்பே நன்றி!
எனக்கான உணவை
எனக்கென விட்டு வைத்த
சிறு பூச்சிகளே நன்றி!
உணவாகி சுவையாகி
சுவைக்கும் நானாகி
இவையெல்லாம் உறையும் நீயாகி
நின்றோய் நின்னை நன்றி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு